×

வழக்கமாக எழும் கேள்விகள்

* கொரோனா வைரஸ் பீதியால் நாடு முழுவதும் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் நாம் எதை செய்யலாம் அல்லது செய்ய முடியாது என்பது பற்றிய ஒரு பார்வை.
* நான் வேலைக்கு செல்லலாமா? அத்தியாவசிய சேவைகளுள் ஒன்றான காவல்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவமனை, ஊடகத்துறை அல்லது அவசர மருத்துவசேவை தொடர்பான பணிகளுக்கு செல்லும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
* எனது வீட்டு பணியாளர் வருவதற்கு அனுமதிக்கலாமா? வீட்டு வேலை செய்யும் ஊழியர்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால் பல குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு சங்கங்கள் தாமாகவே முன்வந்து அவர்களை வரவேண்டாம் என்று அறிவுறுத்தி விட்டனர். ஆனால் அவர்கள் வந்து செல்வது கடினமான ஒன்றாக இருக்கும்.
* என்னிடம் பணம் இல்லை. நான் எங்கு செல்ல வேண்டும்?உங்கள் வீட்டு அருகில் உள்ள ஏடிஎம் அல்லது வங்கிக்கு செல்லலாம்.
* நான் அருகில் உள்ள கோயில், மசூதி, சர்ச்சிற்கு செல்லலாமா? இல்லை. அனைத்து மதவழிபாட்டு தலங்களையும் மூடி வைத்திருக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
* நான் அத்தியாவசிய பணிகளுக்கு  செல்லும் நபர் என்பதை எப்படி  போலீசிடம் தெரிவிக்க வேண்டும்?உங்கள் அலுவலகம் அல்லது நிறுவனம் அளித்திருக்கும் அடையாள அட்டையை காட்டினால் போதும்.

Tags : The coronavirus virus
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு; நாளை விசாரணை!