×

100 ஆண்டு அரச மரம் தீப்பற்றி எரிந்தது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் 100 ஆண்டுக்கு மேல் பழைமையான அரசமரம் ஒன்று உள்ளது.இந்த  மரம் நேற்று முன்தினம் நள்ளிரவு  திடீரேன தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தீயை அணைக்க முயன்றனர். அதற்குள், மரத்தின் அடிப்பகுதி காய்ந்திருந்தால், உள்ளேயே தீ பரவி கொஞ்சம் கொஞ்சமாக மரத்தின் உச்சி வரை சென்று, கொழுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.தீயை முழுமையாக அணைக்க முடியாத நிலை ஏற்பட்டதால், மரத்தை வெட்டி அகற்ற முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று மதியம் 12 மணியளவில் மரத்தை வெட்டி அகற்றினர்.

ஊரடங்கு  அமலில் இருப்பதாலும், போக்குவரத்து இல்லாததாலும் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.தொடர்ந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் நிறுவனத்துக்கு மரம் இடையூறாக  இருந்ததால்  தீவைக்கப்பட்டதா, பெரும் விபத்தை ஏற்படுத்த விஷமிகள் தீ வைத்தார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.Tags : Chengalpattu GST, royal tree
× RELATED சென்னையில் இருந்து மதுவாங்க...