×

தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிய செயலி: எஸ்.பி. அதிரடி

திருவள்ளூர்: கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள், வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களின் வீடுகளை அடையாளப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதையும் மீறி சிலர் வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரிவதால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தமிழகத்தில் முதல் முறையாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அரவிந்தன் புதிய முயற்சியை எடுத்துள்ளார். கம்ப்யூட்டர் இன்ஜினியரான அரவிந்தன் (co buddy) புதிய செயலியை, இன்ஜினியர் விஜய் ஞானதேசிகன் என்பவருடன் இணைந்து 48 மணி நேரத்தில் உருவாக்கியுள்ளார்.  இந்தச் செயலி, முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் செல்போன்களில் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த செயலியை மற்ற மாவட்ட போலீசார் கடைபிடிக்க உள்ளனர்.

Tags : SP, coronavirus
× RELATED ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பற்றதா?