×

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை  அருகே எல்லாபுரம் ஒன்றியம்  லட்சிவாக்கம்  கிராமத்தில்,  கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்  நடந்தது. இதில்,  ஊராட்சி மன்ற தலைவர் வனரோஜா நாதமுனி  தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ்,  துணைத்தலைவர் முரளி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல், தண்டலம் ஊராட்சியில் திமுக  ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி ரவி, ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி, துணைத்தலைவர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  காக்கவாக்கம் ஊராட்சியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் சுமன், துணைத்தலைவர் விக்னேஷ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலலிதா ஊராட்சி செயலாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த 3 ஊராட்சிகளிலும் கை கழுவுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி  முக கவசம் வழங்கினர்.

Tags : Corona Prevention Awareness Camp , Corona, uttukkottai
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...