×

தடையை மீறி தொழுகை நடத்திய 37 பேர் மீது வழக்கு

பெரம்பூர்: கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலை ஆர்.வி.நகரில்  உள்ள மசூதில் நேற்று 10க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்துவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், 144 தடை உத்தரவை மீறி ஒன்று கூடுதல், தொழுகை நடத்துதல் தவறு என்று அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து, அதே பகுதியை சேர்ந்த உசேன் உள்ளிட்ட 7 பேர் வழக்குபதிவு செய்தனர். இதேபோல், பெரம்பூர் கென்னடி சதுக்கம் மெயின் ரோட்டில் உள்ள நவாப் ஜான் என்பவரின் வீட்டில், நூருல்லா என்பவர் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை அழைத்து தொழுகை நடத்துவதாக திரு.வி.க.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார், மின்வாரியத்தில் தெரிவித்து, அந்த வீட்டிற்கான மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் தடையை மீறி தொழுகை நடத்தியதாக நூருல்லா உள்ளிட்ட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags : persons ,Case , Prayer, 37 people sued, coronavirus
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது