×

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த பயன்படுத்தாத வீடுகளை பொதுமக்கள் வழங்கலாம்: மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த  வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 22 ஆயிரம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிமாநிலத்தை சார்ந்த 2000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறிகள் காரணமாக அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பற்றி தொலைபேசி வாயிலாக விசாரிக்கப்படுகிறது. இதற்கான பணியில் 30 மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் மேலும் தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை உருவாக்க வீடுகள் மற்றும் அறைகளை வழங்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது : பாதுகாப்பு காரணங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை அதிகம் உருவாக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்படுத்தப்படாத வீடுகள், அறைகள், லாட்ஜ்கள், மேன்சன் ஆகியவற்றை மாநகராட்சிக்கு வழங்கலாம். இந்த நேரத்தில் பொதுமக்கள் தேசத்தின் நலனுக்காக இந்த உதவியை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : public ,homes ,foreigners ,Corporation ,houses , Housing, public, corporation, corona virus
× RELATED அதிகரித்து வரும் வெயில்...