×

தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ வழங்கினார்

சென்னை: மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, கையுறைகளை மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ வழங்கினார். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையேற்று, திமுகவினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அதன்படி, சைதாப்பேட்டை தொகுதியில் பணியாற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 1000 முகக்கவசங்கள், 25 லிட்டர் கிருமி நாசினி, 200 கையுறைகள் மற்றும் சோப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி அலுவலர்களிடம் சைதாப்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ  மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது சைதாப்பேட்டை மேற்கு பகுதி திமுக செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : MLA ,Disinfection: M Subramanian ,macuppiramaniyan ,Cleaning staff , Cleaners, masks, antiseptic, M Subramanian MLA
× RELATED மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை.! எம்எல்ஏ கருணாஸ்