×

கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம்

சென்னை: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மிருத்யுஞ்ஜெய யாகம் நடந்தது.  இதில் 5க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.  காலை 8.30 மணிக்கு கணபதி பூஜை, கும்ப பூஜை உடன் தொடங்கிய இந்த யாகம் பிற்பகல் 12 மணி வரை நடந்தது. தொடர்ந்து கும்பத்தில் இருந்த புனித நீரில் கபாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர். இதன் மூலம் நாடு முழுவதும் பரவும் நோய் கட்டுப்படும் என்பது ஐதீகம். இதற்காக, சிறப்பு யாகம் நடத்தப்பட்டது என்று கோயில் இணை ஆணையர் காவேரி தெரிவித்தார்.

Tags : Kapaleeswarar Temple , Kapaleeswarar Temple,special place of worship
× RELATED குதிரை வழிபாடு