×

கொரோனா பரவல் எதிரொலி: ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி ரத்து

சென்னை: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். தற்போது அவர் வரும் மே, ஜூன் ஆகிய மாதங்களில் வட அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்திருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வேளையில், தன் பயணத்தில் மாற்றம் செய்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், என் இசையை உலகம் முழுவதும் உள்ள என் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை விட முக்கியமான வேலை எதுவும் எனக்கு கிடையாது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாம் நம் குடும்பத்துடன் வீட்டில் தனித்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, என் ரசிகர்கள், என் குடும்பத்தினர் மற்றும் என் இசைக்குழுவை சேர்ந்த குடும்பத்தினர் ஆகியோரது நலன் கருதி மே, ஜூன் ஆகிய மாதங்களில் வட அமெரிக்காவில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சியை ஒரு வருடத்துக்கு தள்ளிவைக்கிறேன். இந்த இக்கட்டான சூழலில் நாம் மீண்டும் இணைந்து சமூகத்துடன் இசையை பகிர்ந்துகொள்ளலாம். நிச்சயமாக அதுகுறித்து தெரிவிப்பேன். அனைவருடைய பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

Tags : Corona ,AR Rahman , Corona, AR
× RELATED இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா...