×

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: யோகி பாபு திருமண வரவேற்பு நடக்குமா?

சென்னை: கொரோனா வைரஸ் பரவுதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தேசிய ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, 5 பேருக்கு மேல் கூட்டமாக நின்று பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், நடிகர் யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. யோகி பாபுவுக்கும், டாக்டர் மஞ்சு பார்கவிக்கும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி திருமணம் நடந்தது. இதில் இருவீட்டு உறவினர்கள் கலந்துகொண்டனர். திரையுலகினரை யோகி பாபு அழைக்கவில்லை. எனவே திரையுலகினரை அழைத்து, வரும் ஏப்ரல் 5ம் தேதி கிண்டி நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்த அவர், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து, வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினார்.

இந்நிலையில் திடீரென்று இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ஏப்ரல் 5ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் குறைந்து, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும், தேதி மற்றும் இடம் அப்போது அறிவிக்கப்படும் என்றும் யோகி பாபு தரப்பில் கூறப்பட்டது.


Tags : Will Yogi Babu ,wedding reception , Curfew, Yogi Babu wedding reception
× RELATED திருவான்மியூரில் படப்பை மனோகரன் இல்ல...