×

கூட்டணி தலைவர்களை மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்: நாட்டின் நிலைமை, மக்களின் தேவைகள் குறித்தும் பேசினார்

சென்னை: கூட்டணி கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் செல்போனில் நலம் விசாரித்தார். நாட்டின் நிலைமை, மக்களின் தேவைகள் குறித்தும் அவர் பேசினார்.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு முடுக்கி விட்டுள்ளது. நோய் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வெளியில் செல்வதை தவிர்த்து மக்கள் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். அத்தியாவசிய ேதவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது, இன்றைய நாட்டு நிலைமைகள் குறித்தும், மக்களின் தேவைகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகள் பற்றிய நிலைமைகளை பரிமாறிக் கொண்டார்.


Tags : MK Stalin ,coalition leaders ,country , Coalition leaders, MK Stalin, Welfare, Country Status, Corona Virus
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...