×

வலங்கைமான் அருகே கிராம எல்லையில் கயிறு கட்டி தடுப்பு

வலங்கைமான்: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம எல்லையை அப்பகுதி மக்கள் கயிறு கட்டி மூடி பரபரப்பை ஏற்படுத்தினர்.
உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் அதை தடுக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்ட்டது. மேலும் மத்திய, மாநில அரசுகள் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூடியது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திட்கு உட்பட்ட ஆதிச்சமங்கலம் ஊராட்சியின் கிராம எல்லையின் இருபுறத்திலும் தடுப்புகள் அமைத்து விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளூர் மக்கள் மட்டும் பயன்படுத்தவும், வெளியூர் வாசிகள் உள்ளே நுைாய அனுமதியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அவ்வூராட்சியின் கிராமசாலை வழியாக ரெகுநாதபுரம், வடக்குபட்டம், தெற்குபட்டம், வீராணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வலங்கைமான் தாலுக்கா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஏனைய பயன்பாட்டிற்கு இரவு பகலாக பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : village border ,Valangaiman ,village boundary , Valangai, village boundary, block
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...