×

சும்மா சுற்றியவர்களுக்கு பாடம் நடத்திய டிராபிக் இன்ஸ்பெக்டர்

மணப்பாறை: மணப்பாறையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் அபாயம் குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாடம் நடத்தினார். கொரோனாவின் வீரியத்தை மக்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை. வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளது. அதையும் மீறி அவர்கள், வெளியில் சுற்றி வருவதாக குற்றச்சாட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு தரப்பு எச்சரிக்கை விடுத்துடுள்ளது.

இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் திரிந்தவர்களை பெரியார் சிலை ரவுண்டானா அருகே மடக்கி பிடித்த மணப்பாறை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேல், கை கூப்பி, வீட்டிலேயே இருங்கள், அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றுங்கள் என்று கூறி ெகாரோனா வைரஸ் அபாயம் குறித்த விழிப்புணர்வு பாடத்தை நடத்தினார். முன்னதாக அவர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்க வைத்து, அரசின் உத்தரவை மதித்து நடக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

Tags : Tropic Inspector , Lesson, Tropic Inspector
× RELATED பெரம்பலூரில் ஜீப்பில் இருந்தபடியே...