×

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வர உறுதி ஏற்போம்: தமிழக மக்களுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி கடிதம்

சென்னை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. 5,31,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 15 ஆயிரத்து 788 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் 284 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று வரை 29 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம் தேதி மாலை 6 மணி முதல்  வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி அதிகாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்படுவதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.தொடர்ந்து, பிரதமர் மோடி, கடந்த 24ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்கள்  இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். பொதுமக்களின் நன்மை கருதி, 31.3.2020 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் 14.4.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு  அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக மக்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி கடிதம் எழுதியுள்ளார். அதில்; சுய தனிமைப்படுத்துதல் சிறைவாசம் அல்ல; கொரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மீண்டு வர உறுதி ஏற்போம். கனவில் கூட காண முடியாத சவாலான நிலையில் உள்ளோம்; இதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். சமூக இடைவெளி கையாள்வது விகாரமாக இருந்தாலும் மற்றவர்கள் நலனுக்காக அதை கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Tags : Coroner ,Tamil Nadu Sahi , Corona virus, people of Tamil Nadu Sahi, the letter
× RELATED கொடநாடு விவகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று கவர்னரிடம் முறையிட முடிவு