×

அமெரிக்காவுக்கே இந்த நிலை எனும் போது நமது நிலை? எனவே விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம்! : கொரோனா குறித்து ராமதாஸ் ட்வீட்

சென்னை : அமெரிக்காவுக்கே இந்த நிலைமை என்றால் நம் நிலைமை என்ன என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.உலக நாடுகளில் இதுவரை 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை கொரோனா பலி வாங்கியுள்ளது . ஆரம்பத்தில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் படிப்படியாக பரவியது. இதுவரையில் சீனாவில் மட்டும் தான் இதனுடைய தாக்கம் அதிகமாக இருந்தது. சுமார் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.ஆனால் இப்போது அமெரிக்கா சீனாவை மிஞ்சியுள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000க்கும் மேல் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உலகின் ஈடு இணையற்ற வல்லரசான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்று ஒரே நாளில் 17,507 பேரை கொரோனா வைரஸ் நோய் தாக்கியிருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 256 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை அமெரிக்கா மிஞ்சியிருக்கிறது. சீனாவில் இதுவரை 81,285 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 85,268 ஆக அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவுக்கே  இந்த நிலை எனும் போது நமது நிலை? எனவே விழிப்புடன் இருப்போம், விலகி இருப்போம்!, எனத் தெரிவித்துள்ளார்.

Tags : United States of America ,Ramadas ,Corona , When is this the United States of America? So stay alert and stay away! : Ramadas tweets about Corona
× RELATED மக்கள் அலட்சியத்தை கைவிட்டால்...