×

இந்தியாவின் யுக்தியை கையாளும் துபாய்: நோய் கிருமிகளை ஒழிக்க மூன்று நாட்கள் ஊரடங்கு அமல்

அபுதாபி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரேனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக  நாடுகள் தினறி வருகின்றனர். இதற்கிடையே, கொரேனா வைரஸ் தாக்கத்தை தடுக்க இந்தியாவில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எப்போதும் பரபரப்பாக இயங்கும் துபாயில் நோய் கிருமிகளை ஒழிப்பதற்காக, மூன்று நாட்கள் மக்கள் அனைவரும் வெளியே வரவேண்டாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கை மீறினால் இந்திய மதிப்பில்  பத்து லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. நேற்று இரவு 8 மணிமுதல் துபாய் முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால் துபாய் நகரம் போக்குவரத்து இன்றி வெளிச்சோடிய காணப்படுகிறது.

Tags : Dubai ,India , disease ,germs , Dubai,traffic ,veliccotiya
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...