×

2 நாள் அறிவிக்கப்பட்டிருந்த கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை ரத்து

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் இன்றும், நாளையும்  மூடப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.  கொரோனா நோய் தாக்கம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்படும் என்று கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

ஆனால் காய்கறி கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாவதை தடுக்கும் வகையில் மார்க்கெட்டை  இரண்டு நாட்கள் மூடும் அறிவிப்பை வியாபாரிகள் நேற்று ரத்து செய்தனர். இதனால் வழக்கம் போல் இன்றும், நாளையும் மட்டுமல்ல தொடர்ந்து கோயம்பேடு மார்க்ெகட் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Tags : Coimbatore ,market holiday ,market holiday cancellation , 2 day canceled ,Coimbatore,market holiday cancellation
× RELATED கோவையில் பிளஸ் 2 திருத்தும் பணிக்கு...