×

வீட்டுக்கு வந்து குப்பை எடுக்கவில்லை எனக்கூறி பெண் தூய்மை பணியாளரை சரமாரியாக தாக்கியவர் கைது: ஆடையை கிழித்து, கால்வாயில் தள்ளி அட்டூழியம்

துரைப்பாக்கம்: பெருங்குடி ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கவிதா (36). பெருங்குடி மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், சக ஊழியர்களுடன் நேற்று காலை பள்ளிக்கரணை 189வது வார்டுக்குட்பட்ட நேரு நகர் 5வது தெருவில் தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே தெருவில் வசிக்கும் ஆனந்தன் (58), என்பவர், ‘என் வீட்டிற்கு வந்து குப்பையை சுத்தம் செய்ய வேண்டும்,’ என தெரிவித்தார். அதற்கு கவிதா, ‘இப்பகுதியில் தெருக்களில் உள்ள குப்பையை மட்டும்தான் அகற்றுகிறோம். வீடுகளுக்கு சென்று குப்பையை அகற்றுவதில்லை’ என்று கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு ஆனந்தனின் மனைவி அங்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து, கவிதாவை சரமாரியாக தாக்கி, ஆடையை கிழித்து, காலால் எட்டி உதைத்து அங்குள்ள கால்வாயில் தள்ளியுள்ளனர்.

சக ஊழியர்கள் கவிதாவை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளிகரணை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ஆனந்தனை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது மனைவியிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags : cleaner , Man arrested ,allegedly assaulting , female cleaner , not taking garbage
× RELATED திண்டுக்கல், கொடைக்கானல் சிறைகளில்...