×

கொரோனா தாக்குதலுக்கு இடையே அதிர்ச்சி தகவல்: உலகளவில் கை கழுவுவதில் மோசமான நாடுகள் பட்டியலில் 10-வது இடத்தில் இந்தியா

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று வரை 22,200 பேர் உயிரிழந்த நிலையில், 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.  இதன்மூலம் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர்   குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு உலகம் முழுவதும் கை கழுவும் விஷயம் மிக முக்கிய இடம்பிடித்துள்ளது. எனினும், பல நாடுகளில் கை கழுவும் விஷயத்தில் மக்கள் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர். உலகளவில் கை கழுவும் விஷயத்தில் கவனம் செலுத்தும் நாடுகள் குறித்து பிரிட்டனில் உள்ள பிர்மிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு: கை கழுவும் விஷயத்தில் சவுதி அரேபிய  மக்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.

அங்கு 97 சதவீத மக்கள் கை கழுவும் பழக்கம் உள்ளவர்கள். வெறும் 3 சதவீத மக்கள் மட்டுமே கைகழுவும் பழக்கத்தில் இல்லை என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதற்கடுத்து இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவதில் போஸ்னியா,  அல்ஜீரியா, லெபனான், பபுவா நியூ கினியா ஆகிய நாட்டு மக்கள் உள்ளனர். கழிவறை சென்றுவிட்டு வெளியில் வந்தால் கை கழுவ வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் 50 சதவீத மக்கள் இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் இந்தியா 10-வது  இடத்தில் உள்ளது. சீனா (77 சதவீத மக்கள் கை கழுவுவதில்லை), ஜப்பான், தென் கொரியா, நெதர்லாந்து, தாய்லாந்து, கென்யா, இத்தாலி, மலேசியா, ஹாங்காங், இந்தியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. பாகிஸ்தான் 16-வது  இடத்திலும், ஆப்கானிஸ்தான் 25-வது இடத்திலும் வங்கதேசம் 26-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : India ,Attack ,Corona , Shock Information Between Corona Attack: India Ranked 10th Worldwide
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!