×

உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,000-ஐ தாண்டியது: இந்தியாவில் 17 ஆக உயர்வு

சென்னை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று வரை 22,200 பேர் உயிரிழந்த நிலையில், 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர் குணமடைந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கு சிறுநீரக பிரச்சனை மற்றும் இரத்த அழுத்தம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் இறப்பு இதுவாகும். தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார்.


Tags : attack ,India ,Corona , Worldwide, the number of casualties for the Corona attack has exceeded 24,000: up to 17 in India
× RELATED புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு இன்று...