×

அடுத்த ஆண்டு பெண்கள் ஐபிஎல்: மிதாலி ராஜ் கோரிக்கை

புதுடெல்லி: ‘இனியும் காத்திருக்காமல் அடுத்த ஆண்டு பெண்கள் ஐபிஎல் போட்டிகளை நடத்த இப்போதே திட்டமிட வேண்டும்’ என்று நட்சத்திர  வீராங–்கனை மிதாலி ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய பெண்கள் கிரிக்கெட்  அணியின் ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ் நேற்று, ‘அடுத்த  ஆண்டுக்குள் பெண்கள் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டும். அதற்காக பிசிசிஐ இனியும் காத்திருக்காமல் உடனடியாக திட்டமிட வேண்டும். இது என்  தனிப்பட்ட கோரிக்கை. ஆண்கள் ஐபிஎல் போட்டிகள் ேபாலில்லாமல், பெண்கள் ஐபிஎல் அணிகளில் வெளிநாட்டு வீராங்கனைகளின் எண்ணிக்கையை  4லிருந்து 6ஆக அதிகரிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு மிதாலி ராஜ் தலைமையிலான  வெலாசிட்டி அணி உட்பட 3 அணிகளை கொண்ட பெண்கள் டி20 போட்டித் தொடர்  சோதனை முறையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  அதுமட்டுமல்ல சமீபத்தில் நடந்த பெண்கள் டி20 உலக கோப்பையில் இந்திய அணி இறுதி  போட்டி வரை முன்னேறியது. அதனால் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் ‘பெண்கள் ஐபிஎல் போட்டியை அடுத்த ஆண்டு முதல்  நடத்த வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

Tags : IPL ,Mitali Raj ,Women IPL , Women IPL , Mithali Raj
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி