×

தனிமைப்படுத்தல் இடங்கள் அதிகம் தேவை; விடுதிகள், வீடுகள் பயனில்லாமல் இருந்தால் மாநகராட்சி தந்து உதவலாம்: சென்னை ஆணையர் பிரகாஷ்

சென்னை: தனிமைப்படுத்தல் இடங்கள் அதிகம் தேவை என்பதால் விடுதிகள், வீடுகள் இருந்தால் உதவலாம் என சென்னை  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பயன்படுத்தப்படாத விடுதிகள், வீடுகள் இருந்தால் மாநகராட்சிக்கு வழங்கி உதவலாம். அவசரமான காலத்தில் உதவும் பட்சத்தில் பேருதவியாக இருக்கும் எனவும் கூறினார். சீனாவின் வூகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க செய்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 650-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,16 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியை பொறுத்த வரையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினிகளைத் தெளிக்க பவர் ஸ்பிரேயர் மற்றும் 500 நவீன இயந்திரங்கள், பணியாளர்கள் அந்தந்த வார்டுகளில் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிமைபடுத்தப்பட்டிருக்கும் நபர்களின் இல்லங்களில் எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ரயில் சேவை இல்லாததால் ஊருக்கு செல்லமுடியாத பயணிகள் மாநகராட்சியின் சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் , குடிசைப் பகுதிகளில், சிறிய சந்துகளில் கிருமி நாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது; தனிமைப்படுத்தல் இடங்கள் அதிகம் தேவை என்பதால் விடுதிகள், வீடுகள் இருந்தால் உதவலாம். பயன்படுத்தப்படாத விடுதிகள், வீடுகள் இருந்தால் மாநகராட்சிக்கு வழங்கி உதவலாம். அவசரமான காலத்தில் உதவும் பட்சத்தில் பேருதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Isolation spaces ,Madras Commissioner Prakash ,houses ,hotels , Isolation, Hotels, Housing, Corporation, Madras Commissioner Prakash
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...