×

இறந்த பிறகும் ஒருவரின் ரத்தத்தில் உயிர் வாழும் கொரோனா வைரஸ் : பிரேத பரிசோதனையால் சீன மருத்துவர்கள் அதிர்ச்சி

பெய்ஜிங் : கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் சடலத்தை அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம் என்று சீனா எச்சரித்துள்ளது.முதன்முறையாக சீனாவின் வூகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க செய்து வருகிறது. இந்த கொரோனா வைரஸால் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை 21,283ஆக உயர்ந்துள்ளது. 4,71,060 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்1,14,218 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசால் 650க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் உயிர் இழப்பை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா குறித்து சீனா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக முழுமைக்கும் சீனா வழங்கி வரும் அறிவுரை எச்சரிக்கையாக மாறி உள்ளது.அதில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் இறுதிச்சடங்கை அதிக நேரமாக நடத்த வேண்டாம் என்ற எச்சரிக்கையை சீனா உலகம் முழுவதும் விடுத்துள்ளது.கொரோனாவால் உயிரிழந்த 29 சடலங்களை பிரேத பரிசோதனை செய்ததில் சீன மருத்துவர்கள் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் நுரையீரலில் கொரோனா வைரஸ் அப்படியே இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையான சேதபடுத்தியுள்ளதாகவும், மூச்சுக்குழாய்களையும் வைரஸ் பாதித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களின் ரத்தத்தில் கொரோனா வைரஸ் வலுவாக வாழ்கிறது என்றும் சீன மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags : someone ,death ,autopsy ,doctors ,Chinese , Corona virus in the blood of a person to life after death: autopsy and medical shocked by the Chinese
× RELATED சிறையில் இருப்பவரை ஜாமீனில்...