×

உத்திரப்பிரதேசத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா'என்று பெயர் சூட்டிய பெற்றோர்!!

லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு அதன் பெற்றோர் கொரோனா என்று பெயர் சூட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. முதன்முறையாக சீனாவின் வூகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கொலை நடுங்க செய்து வருகிறது. இந்த கொரோனா வைரஸால் உயிரிந்தவர்கள் எண்ணிக்கை 21,283ஆக உயர்ந்துள்ளது. 4,71,060 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்1,14,218 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசால் 600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே உத்திரபிரதேச மாநிலத்தில் இதுவரை 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அறிவித்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உ.பி. தலைநகர் லக்னோவிலிருந்து 275 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோரக்பூர் நகரத்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு புதிதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து கொரோனாவுக்கு எதிரான மக்கள் ஊரடங்கின் போது பிறந்ததால் தங்களது மகளுக்கு ‘கொரோனா’ என்று பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் மாமா கூறுகையில், “ கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. இது உலகில் பல மக்களை கொன்றுள்ளது. ஆனால் இது நம்மில் பல நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொண்டு உலகை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது, இந்த குழந்தை, தீமைக்கு எதிராக போராடுவதற்கான மக்கள் ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும்” என கூறினார்.


Tags : Parents ,Uttar Pradesh ,baby girl , Parents name new baby girl in Uttar Pradesh
× RELATED உ.பி.யில் திருமண ஊர்வலத்திற்காக காரை...