×

சீனா, ஈராக்கில் இருந்து வந்த 3 பேர் தப்பி ஓட்டம்? கோயம்பேடு, திருமங்கலத்தில் போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை: சீனா மற்றும் ஈராக்கில் இருந்து சென்னை திரும்பிய 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மூவரும் தப்பி ஒடிவிட்டனர்.  திருமங்கலத்தை சேர்ந்த லட்சுமணன் அருண் சமீபத்தில் சீனா சென்றுவிட்டு சென்னை திரும்பியிருந்தார். அவரை தனிமைப்படுத்தி, கையில் முத்திரை குத்தி, தங்கியிருந்த வீட்டில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டி கண்காணிக்கப்பட்டு வந்தார். இதேபோல், கோயம்பேட்டில் தந்தை, மகன் ஆகிய இருவரும் ஈராக்கில் வேலைக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியிருந்தனர். அவர்களது வீடுகளிலும் இதேபோல் கண்காணிப்பு பணி நடைபெற்றது. இதற்கிடையே சுகாதாரத்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, திருமங்கலத்தில் வசித்த லட்சுமணன் அருண் மற்றும் கோயம்பேட்டில் தங்கியிருந்த தந்தை, மகன் ஆகிய 3 பேரும் தப்பிச் சென்றுவிட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளின் புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.Tags : Iraq ,China ,Thirumangalam ,Coimbatore 3 ,Coimbatore , China, Iraq, 3 escaped, Coimbatore, Thirumangalam, police case filed
× RELATED வேணாம்... நியாயமில்லை: சீனா புலம்பல்