×

ஓசூரில் 3,000 தொழிற்சாலைகள் மூடல்

ஓசூர்: கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு மற்றும் தேசிய அளவில் 21 நாள் முடக்கம் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள சுமார் 3 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து, ஹோஸ்டியா சங்க தலைவர் வேல்முருகன் கூறுகையில், ‘‘ஓசூரில் பல லட்சம் தொழிலாளர்கள் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது. விடுமுறையின்போது பிடித்தம் இல்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரும்பாலான தொழிற்சாலைகள் நஷ்டத்தில் உள்ளதால், பிடித்தம் இன்றி ஊதியம் வழங்கினால் இன்னல்களுக்கு ஆளாவோம் என தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறிவருகின்றனர். இதனை  தடுக்க தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் 75 சதவீத தொகையை தமிழக அரசு  வழங்க வேண்டும். ஜிஎஸ்டி செலுத்தாத  சிறு மற்றும் குறு  தொழிற்சாலைகளுக்கு அபராதம் விதிக்க கூடாது என்றார்.

Tags : Closure ,factories ,Hosur , Hosur, 3,000 factories, closure, corona virus
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...