×

பெரியபாளையம் அருகே சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து

சென்னை: ஆந்திரா மாநிலம் கடப்பாவில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கு  வாழைத்தார் ஏற்றிக்கொண்டு திருப்பதி வழியாக  லாரி ஒன்று வந்தது.  லாரியை   அதே பகுதியை சேர்ந்த மாபூபாஷா (35) என்பவர்  ஓட்டி வந்தார். உடன் கிளீனர் முகம்மது (20) என்பவர் இருந்தார். இந்த லாரி நேற்று  அதிகாலை  4 மணியளவில் ஊத்துக்கோட்டையை கடந்து தண்டலம் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து பேரல்  தடுப்பை உடைத்துக்கொண்டு சென்டர் மீடியன் மீது மோதியது. இதில் லாரி டிரைவர் மற்றும் கிளீனர்  காயமின்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Lorry ,Periyapayalam Periyapayalam ,center median , Periya Palayam, Center Median, truck, collision
× RELATED சென்னையில் இருந்து லாரி மூலம் உ.பி....