×

திருவொற்றியூர், மணலியில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 200 பேர் கண்காணிப்பு

திருவொற்றியூர்: வௌிநாடுகளில் இருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களில் 200 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சுகாதார மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் இவர்களது வீடுகளிலும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதையடுத்து திருவொற்றியூரில் வெளிநாடுகளில் இருந்து வந்த 69 பேரை தனிமைப்படுத்தி, கண்காணிக்கப்படுகின்றனர். மேலும், வடமாநில ரயில் இயக்கப்படாததால் இங்கு தங்க வைத்துள்ள 90 பேரும் தனியார் மண்டபத்தில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இதேப்போல் மாதவரம் மண்டலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 68 பேர் மற்றும் வடமாநில ரயில்கள் இயங்காததால் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ள 55 பேர், மணலி மண்டலத்தில் 21 பேர் தனியார் மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.


Tags : home ,Overseas ,Manali Survivallance ,Manali , Thiruvottiyur, Manali, 200 people watching
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...