×

வெளிநாடுகளில் இருந்து காஞ்சிபுரம் பள்ளிவாசலுக்கு வந்த 16 இஸ்லாமியர்கள் கண்காணிப்பு: கலெக்டர் உத்தரவு

சென்னை:  கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்தோனேஷியா, மலேசியா மற்றும் அசாம் மாநிலத்தில் இருந்து 16 இஸ்லாமியர்கள் டெல்லிக்கு வந்தனர். பின்னர், அங்கிருந்து காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள சுன்னத் ஜும்மா பள்ளிவாசலுக்கு வந்து தங்கியுள்ளனர். தற்போது வெளிநாடு ,வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் தங்களை பதிவு செய்து கொண்டு மருத்துவ உதவிகளை நாடலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் வந்துள்ள இஸ்லாமியர்கள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளிவாசலில் தங்கியுள்ள இஸ்லாமியர்களின் பயண விவரங்களை கேட்டறிந்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து, கலெக்டர் பொன்னையா நேரடியாக சென்று, அவர்களை ஆய்வு செய்தார். பின்னர் 16 பேரையும் தனிமைப்படுத்தும் வகையில் தனி அறையில் வைக்க வேண்டும். மருத்துவக் குழுவினர் தினமும் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட 10 பேர் இந்தோனேஷியா, 4 பேர் மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். 2 பேர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 156 பேர்  தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் , வரும் காலங்களில் பைக்கில் வெளியே செல்வதை இளைஞர்கள் தவிர்க்கவேண்டும் என கலெக்டர் கூறினார்.


Tags : Islamists ,school ,Kanchipuram ,Collector , Foreigners, Kanchipuram School, Islamists
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...