×

தாம்பரம் நகராட்சி சார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வினியோகம்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சி சார்பில் அப்பகுதிகளில் சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை பல்வேறு நாடுகளில் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்திலும், இதுவரை 15க்கும் மேற்பட்டார் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தாம்பரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்த ஆதரவற்றவர்களை கணக்கெடுக்கப்பட்டது. அவர்களுக்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து அவர்களுக்கு தாம்பரம் நகராட்சி சார்பில் மூன்று வேளையும் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர், அம்மா உணவகத்தில் இருந்து உணவுகள் பார்சல் மூலம் கொண்டுவரப்பட்டு தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையா ராஜா சுமார் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவுகள் வழங்கினார். உடன் வருவாய் அலுவலர் கருமாரியப்பன், சுகாதார அலுவலர் மைதீன், சுகாதார ஆய்வாளர்கள் சிவகுமார், ஜனார்த்தனன், சாமுவேல் உட்பட ஏராளமான நகராட்சி ஊழியர்கள் இருந்தனர். தொடர்ந்து 21 நாட்களுக்கு இதுபோன்று ஆதரவற்றவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் 3 வேளையும் உணவுகள் வழங்கப்படும் என தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையா ராஜா தெரிவித்தார். அதேப்போல தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் தாம்பரம் மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் ஆதரவற்று சுற்றித்திரியும் நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

Tags : orphans ,Tambaram Municipality ,Orphans for Distribution of Food , Tambaram Municipality, Orphans, Food
× RELATED குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை...