×

கை கழுவ மறந்தால் நினைவூட்டும் கருவி: பஞ்சாப் மாணவர் கண்டுபிடிப்பு

கொரோனா பரவலைத் தடுக்க குறைந்தபட்சம் ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், நாம் சரியாக ஒரு மீட்டர் இடைவெளியில் இருக்கிறோமா?  தவறாமல் கைகளை கழுவுகிறோமா? என்று நினைவூட்டும் செயினுடன் இணைக்கக் கூடிய டாலர் வகையிலான கருவியை பஞ்சாப் பொறியியல் மாணவரான பிரவின் குமார் தாஸ் கண்டுபிடித்துள்ளார். எல்இடி, வைபரேட்டர், கன்ட்ரோலர், பேட்டரி, டெம்பரேச்சர் சென்சார், அல்ட்ராசோனிக் சென்சார், ஸ்டோரேஜ் கார்டு கொண்டு, இந்த டாலர் வடிவ கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி, 30 நிமிடங்களுக்கு ஒருமுறை பீப் ஒலி எழுப்பி கைகளை கழுவவும், ஒரு மீட்டர் இடைவெளி குறையும் போது வைபரேட் செய்தும் அதை பயன்படுத்துபவரை எச்சரிக்கை செய்யும். சமூக இடைவெளியை பராமரிக்க மக்கள் சிரமப்படுவதால் இதனைக் கண்டுபிடித்ததாக பிரவின் குமார் தெரிவித்தார்.



Tags : Hand Washing, Remembrance Tool, Punjab Student, Corona
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...