×

கொரோனா வைரஸ் உருவாவதற்கு சீனா தான் காரணம் என எந்த ஆராய்ச்சியாளர்களும் நிரூபிக்கவில்லை: சீன தூதரகம் அறிவிப்பு

வுகான்: கொரோனா வைரஸ் உருவாவதற்கு சீனா தான் காரணம் என்று இதுவரை எந்த ஆராய்ச்சியாளர்களாலும் நிரூபிக்கப்படவில்லை என இந்தியாவிற்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 195-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் தொடக்கத்தில் சீனாவில் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டேவந்தது. ஆனால் சமீபத்திய நாட்களில் அங்கு கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் உலகளவில் கொரோனா வைரசால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,100-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 4,28,193 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,09,214 பேர் உலகளவில் குணமடைந்துள்ளனர். மேலும் இந்த வைரஸால் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று கூறி வருகிறார். மேலும் பல நாடுகளும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு சீனா தான் காரணம் என குறை கூறி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் மருத்துவ வல்லுநர்களின் ஆராய்ச்சியின் படி கொரோனா வைரஸ் எங்கு, எப்படி  தோன்றியது என்பது இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்றும், சீனாவின் வுகான் மாகாணத்திலேயே முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும் சீனா தான் கொரோனா வைரஸ்க்கு காரணம் என்று அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகவில்லை என்றும், கொரோனா வைரஸால் சீன மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Tags : embassy announcement ,researchers ,China , Coronavirus, China, Researchers, Chinese Embassy
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்