×

நெருக்கடியான சூழலில் நாடு இருக்கும்போது காசிநகரம் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்: வாரணாசி மக்களிடம் காணொலி மூலம் பிரதமர் மோடி உரை

டெல்லி: கொரோனவை எதிர்த்து போராடும் வல்லமையை நாட்டிற்கு தர இறைவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் மூடுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. வைரசால் 11 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 530ஐ தாண்டி உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு  நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், வைரஸ் பரவுவது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றிய போது இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள்  யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். அதைப்பற்றி நினைத்து கூட பார்க்க வேண்டாம். அடுத்த 21 நாட்கள் நமக்கு மிக, மிக முக்கியமானது. த்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதி மக்களுடன் இன்று மாலை 5 மணிக்கு காணோலி காட்சி மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்;
* கொரோனவை எதிர்த்து போராடும் வல்லமையை நாட்டிற்கு தர இறைவனை பிரார்த்திக்கிறேன்

* கொரோனாவிற்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி அடைய வேண்டும்
 
* சமூக இடைவெளி என்பது மிகவும் முக்கியமானது
 
* சமூக இடைவெளிதான் கொரோனா பரவலை தடுப்பதற்கு ஒரே தீர்வாகும்
 
* கொரோனாவை சுற்றிவளைத்து தடுப்போம்
 
*கொரோனா பாதிப்புக்கு எதிரான 21 நாள் போரில் நாம் வெல்வோம்

*இக்கட்டான இந்த சூழலில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்

*நெருக்கடியான சூழலில் நாடு இருக்கும்போது காசிநகரம் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Modi ,country ,Varanasi , Crisis, Country, Kasinagar, Varanasi, PM Modi
× RELATED டீப் ஃபேக் வீடியோவால் அரசியல்...