×

தேர்தலின் போது பயன்படுத்தப்படும் அழியாத மையை கொரோனாவிற்காக தனிமைப்படுத்தப்பட தேவையிருப்போர் கையில் சீல் வைக்க தேர்தல் ஆணையம் அனுமதி

டெல்லி: கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்கள் மீது இனி அழியாத மை பயன்படுத்தி முத்திரை அளிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மையானாது இடப்பட்ட நிலையில் அது அழிந்து வருவதாக புகார் எழுந்து வந்த நிலையில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டோர் மீது இனி அழியாத மை பயன்படுத்தி முத்திரை அளிக்க தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது.

மேலும் நாளுக்கு நாள் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அல்லது கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் அல்லது முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு அடையாளத்தை பதிவு செய்யும் விதத்தில் பல்வேறு மாநிலம் மற்றும் மத்திய அரசு சார்பாக ஒரு அடையாளமானது குறியிடப்பட்டுள்ளது.

அந்த குறியீட்டிற்கு தேர்தல் ஆணையத்தில் பயன்படுத்தும் மையை பயன்படுத்த அதிகாரப்பூர்வ உத்தரவை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் இந்த முடிவிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Election Commission ,corporation ,election ,Electoral Commission Allows Coroners , Perishable Ink, Corona, EC, Permission
× RELATED ஆவடி மாநகராட்சியில் 4 பேர் பலி