×

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை


சென்னை : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றுள்ளது. 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2ம் தேதி தொடங்கிய நேற்றுடன் நிறைவு பெற்றது.

நேற்று வேதியியல், கணக்கு பதிவியியல் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வில் நேற்று 34,000 மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.நேற்று மாலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனினும், பல்வேறு பகுதியில் போக்குவரத்து முடங்கியதால் மாணவர்கள் வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் நீண்ட தொலைவுகளிலிருந்து வந்து தேர்வெழுதும் மாணவர்கள் பலர் தேர்வுகளுக்கு வரவில்லை என தெரிகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நேற்று நடந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,616 பேர் பங்கேற்கவில்லை என்றும் மார்ச் 2ம் தேதி நடந்த தமிழ் தேர்விலும் 1,704 பேர் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடைசி தேர்வில் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : examination ,GCE A / L ,Tamil Nadu ,Corona , 34,000 students did not take the GCE A / L examination in Tamil Nadu due to Corona threat
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு...