×

ரூபாய் நோட்டு வழியாக கோவிட்-19 பரவுமா? : உறுதியான சான்றிதழ் இல்லை; ஆனால் முன்னெச்சரிக்கையாக இருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்

மும்பை: ரூபாய் நோட்டு மூலம் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஐஐடி) சமீபத்தில் எழுதிய கடிதம், தொற்றுநோய்களின் போது பணத்தை கையாள்வது குறித்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. நிதியமைச்சருக்கு எழுதிய கடிதத்தைத் தவிர, 50 மில்லியன் சிறு வணிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பான சி.ஏ.ஐ.டி. (CAIT), மார்ச் 11 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியது; அதில், பாலிமர் செலாவணி முறையை நோக்கி இந்தியாவை நகர்த்துவாறு வலியுறுத்தியது.

... முன்பின் தெரியாத நபர்களின் கைகளில் இருந்து ரூபாய் விரைவாக மாறிக் கொண்டே இருப்பதால் வெவ்வேறு வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களை சுமந்து செல்லும் மிகவும் பயமுறுத்தும் ஒன்றாக ரூபய் பயன்பாடு அமைந்துவிடுகிறது. இதனால் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது, என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் சி.ஏ.ஐ.டி. (CAIT) தெரிவித்துள்ளது. பாலிமர் ரூபாயின் பாதுகாப்பு தன்மையை இந்த அமைப்பு சுட்டிக்காட்டி, அந்த முறைக்கு முற்றிலும் மாறியுள்ள 13 நாடுகளை குறிப்பிட்டு, காகித மாறுபாடுகளை விட்டுவிட்டு, பாலிமர் பயன்பாட்டுக்கு மாற முயன்று வரும் 15 நாடுகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

தற்போது வரை, அழுக்கான ரூபாய் நோட்டுகள் வழியே கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கான எந்தவொரு உறுதியான விஞ்ஞான ஆய்வும் இல்லை என்றாலும், உலக சுகாதார அமைப்பு (WHO), ரூபாய் நோட்டுகளை சரியான பாதுகாப்பான முறைகளில் கையாள நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) கூட ரூபாய் நோட்டு பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து எந்தவொரு அறிக்கையையும் வெளியிடாமல் உள்ளது.

அசுத்தமான பண நோட்டுகளை பற்றிய இந்த கவலைகள் மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கின்றன.  கொரோனா பாதித்த சீனாவில் தற்போது புற ஊதா ஒளிக்கதிர் பாய்ச்சுதல், அதிக வெப்பநிலையில் வைத்தல், 14 நாட்களுக்கு நோட்டுகளை தனிமைப்படுத்துதல் மற்றும் இருக்கும் பணத்தை அழித்தல் ஆகியவை  நடவடிக்கைகளின் கீழ் மூலம், பணத்தில் உள்ள கிருமிகளை சீன மக்கள் வங்கி நீக்கி வருகிறது. அமெரிக்காவில் சில வங்கிகள், பாதுகாப்பான காகித பயன்பாட்டுக்கு உறுதியளிக்குமாறு, பெடரல் ரிசர்வ் மற்றும் அமெரிக்க கருவூலத்தை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

Tags : spread ,Kovit-19 ,experts , Will the Kovit-19 spread through the rupee? : No affirmative certificate; But experts say caution
× RELATED மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற அவதூறு...