×

கொரோனாவால் கோழிக்கறி விலை வீழ்ச்சி ஆட்டுக்கறி விலை உயர்ந்தது கிலோ ரூ.1,000க்கு விற்பனை

கொடைக்கானல்: தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதையடுத்து, உணவு பொருட்களின் விலை, காய்கறிகள் விலை உயரத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே, கொரோனா, பறவைக்காய்ச்சல் பீதியால் கோழிக்கறி விலை படிப்படியாக குறையத்தொடங்கியது. பல இடங்களில் கிலோ ₹60 முதல் ₹100 வரை விற்பனையாகிறது. விலை குறைந்தபோதும், யாரும் வாங்கத் தயாரில்லை. இதனால் ஆட்டுக்கறிக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று ஒரு கிலோ ஆட்டுக்கறி ₹1,000க்கு விற்கப்பட்டது. இதனால் அசைவப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல ஒரு கிலோ தக்காளி ₹60 முதல் ₹70 வரை விற்கப்பட்டது. இந்த விலை ஏற்றத்தால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Tags : Corona , Prices, chicken , Corona fell , lamb rose , Rs 1,000 per kg
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...