×

கொரோனா வைரஸ்... உஷார்...: வீட்டில் ஓய்வெடுங்கள் அல்லது நிரந்தர ஓய்வு முடிவு உங்கள் கையில்

டெல்லியில் 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்  டிவிட்டர் பதிவு: டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக புதிய பதிவுகள் எதுவும் இல்லை. எனினும், எங்களுக்கு இவை திருப்தி அளிக்கவில்லை. இப்போது நமக்கு முன்னாள் உள்ள சவால் என்னவெனில், தற்போதுள்ள சூழல் நமது கையைவிட்டு சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வது தான். எனவே, மக்களின் ஆதரவு எங்களுக்கு தேவை என்று தெரிவித்துள்ளார்.

செயற்கை சுவாச கருவி, சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை
கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முகக் கவசம், சானிடைசர் ஆகியவற்றை பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால், தேவை அதிகரிப்பு காரணமாக இவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், செயற்கை சுவாசக் கருவி, சானிடைசர் ஆகிய மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு நேற்று முதல் தடை விதித்துள்ளது.
 இரு தினங்களுக்கு முன், முகக் கவசம், அது தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப் பொருட்கள் ஏற்றுமதி செய்ய அரசு தடை விதித்தது.

புனே தனியார் நிறுவனம் தயாரிப்பு இரண்டரை மணி நேரத்தில் நோயை கண்டுபிடிக்கும் உபகரணம் வந்தாச்சு
இந்தியாவில் இனிமேல் கொரோனா பரவல் மேலும் அதிகமாகும் என்று கருதும் நிலையில், இந்நோயை கண்டறிவதற்கான சோதனைகளை நடத்துவது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. தற்போது, கோவிட் -19 நோயை கண்டுபிடிப்பதற்கான உபகரணத்தை தேசிய வைரலாஜி மையம் மட்டுமே தயாரித்து வருகிறது. இதன் விலை ரூ.4,500. மேலும், இந்த உபகரணத்தை கொண்டு நடத்தப்படும் சோதனையின் முடிவை தெரிந்து கொள்ள 6 முதல் 8 மணி நேரம் வரையாகிறது. இதனால், தனியார் நிறுவனங்களில் இந்த உபகரணத்தை தயாரிக்கும் அனுமதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இதன்படி, மகாராஷ்டிராவில் புனே நகரத்தில் உள்ள லோனாவாலாவில் இயங்கி வரும், ‘மைலேப்ஸ் டிஸ்கவரி சொலுஷன்ஸ்’ என்ற நிறுவனம், கொரோனா நோயை 2.5 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் புதிய பரிசோதனை உபகரணத்தை வடிவமைத்து உள்ளது. இதன் விலையும், தேசிய வைரலாஜி மையத்தின் உபகரணத்தை விட நான்கில் ஒரு பங்கு விலை குறைவானது. இந்த உபகரணத்துக்கு தேசிய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. நாளொன்றுக்கு 15 ஆயிரம் உபகரணங்களை தயாரிக்கும் திறனை இந்த நிறுவனம் ெகாண்டுள்ளது. விரைவில் இதன் உற்பத்தி திறன் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரமாக அதிகரிக்கப் படும் இதன் நிறுவனர்களில் ஒருவரான காந்த் படோலி தெரிவித்தார்.



Tags : Usher ,home , Coronavirus Virus , Rest at home , hands for permanent rest
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...