×

சில்லி பாயின்ட்...

* ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசன் எப்போது நடைபெறும் என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாத நிலையில் உள்ளோம் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் நேற்று நடப்பதாக இருந்த ‘கான்பரன்ஸ் கால்’ ஒத்திவைக்கப்படுவதாவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
* குடும்பத்துடன் சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ள ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், வீட்டிலேயே டென்னிஸ் பந்தை உபயோகித்து பீல்டிங் பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
* அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கோவிட்-19 பாதிப்புக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம்’ என்று கால்பந்து நட்சத்திரம் சுனில் செட்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளார்.

Tags : IPL T20 , IPL T20 Series
× RELATED இந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு