×

சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைந்த 2 இந்தியர் கைது

நியூயார்க்:  அமெரிக்காவில் பர்கே, மசேனா எல்லை ரோந்து காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் கடந்த வாரம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர். அதில், இருந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதனிடையே, வாகனத்தில் இருந்த பெண் ஓட்டுனர் தப்ப முயன்றார். அவரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக  4 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 பிடிபட்ட 3 பேரில் இரண்டு பேர் இந்தியர்கள். மற்றொருவர் இத்தாலியை சேர்ந்தவர். மூன்று பேரும் சட்ட விரோதமாக கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது.  சட்ட விரோதமாக நுழைந்ததற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.Tags : United States ,Indians , US, 2 Indians, arrested
× RELATED சீன நாட்டு விமானங்கள்...