×

10 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை:  தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த பின்பு முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* காவல் ஆளுநர்களின் மிகை நேரப்பணிக்கான மதிப்பூதியம் 200லிருந்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* சென்னை பெருநகர் பூந்தமல்லியில் புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்படும்.  
* 10 புதிய காவல் நிலையங்களும், 7 போக்குவரத்து காவல் நிலையங்களும், 10  புறக்காவல் நிலையங்களும் உருவாக்கப்படும்.
* 12 புறக்காவல் நிலையங்களை முழு நேர காவல் நிலையமாக தரம் உயர்த்தப்படும்.
* ஆயுதப் படைக்கு புதிய படைப்பிரிவு உருவாக்கப்படும்.
* காவல் துறையில் வாகன வசதியை மேம்படுத்துவதற்காக 70.14 கோடியில் புதிய வாகனங்கள் வாங்கப்படும்.
*  ேகாவை மாநகரில் ₹17 கோடியில் கண்காணிப்பு கேமராவும், திருப்பூர் மாநகரில் 12 கோடியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
* தீயணைப்பு பணியாளர்களுக்கு 15 மற்றும் 25 ஆண்டுகள் பணி முடிந்த உடன் அடுத்த பதவிக்கு தரம் உயர்த்தப்படும்.
* 39 மாவட்ட தலைமையக தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களுக்கு உதவி மாவட்ட அலுவலர் அந்தஸ்த்தில் முதன்மை நிலைய அலுவலர் பதவிகள் உருவாக்கப்படும்.
* புதிதாக 11 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள், ஒரு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களின் தரம் உயர்த்தப்படும்.

Tags : police stations ,CM Palanisamy ,Announcement , 10 new police stations, Chief Minister Palanisamy
× RELATED சென்னையில் காவல் நிலையங்களில்...