×

மது குடிப்பவர்களுக்கு ஆலோசனை வழங்க மாவட்டம்தோறும் மையம் கோரன்டைன் வார்டுகளில் மனநல சிகிச்சை: டாக்டர் நூருல்ஹசன் எம்டி, நிம்ஹான்ஸ்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் மது குடிப்பவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க மாவட்டம்தோறும் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும் என்று இந்திய மன நல மருத்துவம் மற்றும் நியூரோ அறிவியல் மையத்தின் மருத்துவர் நூருல் ஹசன் தெரிவித்தார். இது தொடர்பாக தினகரன் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி :  கொரோனா வைரசின் பரவும் தன்மை எத்தகையது? 2003ம் ஆண்டில் உருவான சார்ஸ் வைரசின் பரவும் தன்மை குறைவு. ஆனால் பரவிவிட்டால் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும். இந்த கொரோனா வைரஸ் பரவும் தன்மை அதிகம். அதனால் இறப்பு விகிதம் அதிகம். கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரிடம் தொடர்பில் இருந்தவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுமா?  கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு 14 நாட்களுக்கு பின்னர்தான் அதன் தன்மை தெரியவரும். இந்த 14 நாட்களில் தொற்று உள்ளவர்கள் பலருக்கு இதை பரப்ப வாயப்பு உள்ளது.

ஆனால் அவருடன் ெதாடர்பில் இருந்த அனைவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்று தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.  கோரன்டைன் வார்டுகளில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான மன நல சிகிச்சை அளிக்க வேண்டும்? இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரு சில நாட்கள் மட்டுமே தனிமையில் இருந்துள்ளார்கள். இந்நிலையில் அவர்களை 14 நாட்கள் தனிமையில் வைக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவர்களின் மன நிலையை சீராக வைத்துக் கொள்ள அனைத்து கோரன்டைன் வார்டுகளிலும் மன நல மருத்துவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் சீரான இடைவெளியில் வார்டுகளில் உள்ளவர்களுக்கு மன நல சிகிச்சை அளிக்க வேண்டும்  ஒரு வாரத்திற்கும் மேல் மது குடிக்காமல் இருந்தால் அவர்களின் மன நிலை எப்படி இருக்கும். அதை சீர்படுத்த என்ன செய்ய வேண்டும்?

இந்த ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து மது குடித்து கொண்டு இருப்பவர்கள் சில நாட்கள் மது குடிக்காமல் இருந்தால், அவரது மனநிலையில் மாற்றம் ஏற்படும். இதனால் அவர்களுக்கு டெலிரியம் டிரம்ன்ஸ் என்ற நோய் ஏற்படும். இந்த நோயால் அவர்கள் யார் என்றே தெரியாத நிலைக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களில் இவர்களுக்கான ஆலோசனை அமைக்க வேண்டும்.  அறிகுறி உள்ள விதிகளை மீறி வெளி இடங்களுக்கு சென்று மற்றவர்களுக்கு நோயை பரப்புவது என்ன மாதிரியான மனநிலை?  இதை தடுக்க வீடு வீடாக ஆய்வு செய்து அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துவதான். தமிழக அரசு வீடுவீடாக ஆய்வு செய்து அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த வேண்டும். இதைத்தவிர்த்து அறிகுறி உள்ளவர்கள் மீது இந்த பழியை சுமத்துவது ஏற்புடையது அல்ல.


Tags : center ,Nurulhassan MD ,Nimhans ,Noorulhasan MD ,District Counseling Center ,Corentine Wards , Alcoholics, Corentine Wards, Psychiatry, Dr Noorulhasan MD, Nimhans
× RELATED நீலகிரி தொகுதி வாக்கு எண்ணிக்கை...