×

டிரம்ப் மனைவிக்கு கொரோனா?

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் மனைவி கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர் நலமுடன் இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவரை மருத்துவ நிபுணர்கள் பரிசோதித்ததில், அவர் நன்றாக இருப்பதாக அறிவித்தனர். அதனை, அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று நடந்த மாநாட்டில் தெரிவித்தார். கொரோனா வைரசுக்கு தனது மனைவியும் பரிசோதிக்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை.

இதேபோல், துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவி கரேன் பென்ஸ் ஆகியோர்  கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களும் நன்றாக இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. ஏற்கனவே, அதிபர் டிரம்ப் பரிசோதிக்கப்பட்ட அதே இரவில் அவரது மனைவியும் பரிசோதனை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,Trump ,Trump Land , Trump Land, Corona?
× RELATED சென்னையில் இருந்து கன்னியாகுமரி...