×

கொரோனா பாதிப்பால் மக்களுக்கு இலவச உதவி நூலகத்திற்கு பதிலாக ‘லிட்டில் ஃப்ரீ பேன்ட்ரீஸ்’ தந்தைக்கு விட்டுக் கொடுத்த அமெரிக்க குழந்தைகள்

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பால் மக்களுக்கு இலவச உதவிகளை வழங்குவதற்காக, ‘லிட்டில் ஃப்ரீ பேன்ட்ரீஸ்’ அமைக்க தாங்கள் பராமரித்து வந்த நூலகத்தை தனது தந்தைக்கு குழந்தைகள் விட்டுக் கொடுத்தனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையில், உணவு பொருட்களை வாங்கி அலமாரிகளை நிரப்பி வருகின்றனர். சிலர் தங்களது குழந்தைகளின் சிறிய அளவிலான இலவச நூலகங்களான ‘லிட்டில் ஃப்ரீ லைப்ரரி’களை ‘லிட்டில் ஃப்ரீ பேன்ட்ரீஸ்’ ஆக மாற்றி வருகின்றனர். புத்தக அலமாரிகளில் பல இப்போது உணவு பொருட்கள், பாஸ்தா மற்றும் தேவைப்படுபவர்களுக்கு கழிப்பறை காகிதம் போன்றவற்றால் நிரம்பி உள்ளன.

இதுகுறித்து, தெற்கு அமெரிக்காவில் உள்ள ஆர்கன்சாஸில் வசிக்கும் ஜெசிகா மெக்லார்ட் கூறியதாவது: இது ஒரு நிச்சயமற்ற நேரமாக உள்ளது. யாருக்காவது எதையாவது ஒரு உதவியை செய்தே ஆக வேண்டும். முதலில் ஒரு நண்பரிடமிருந்து  யோசனை ேகட்டேன். பொருட்களை மக்களுக்கு கொடுப்பதற்காக, ஒரு இடம் மற்றும் அலமாரி தேவைப்பட்டது. எனது குழந்தைகளின் சிறிய இலவச நூலகத்தை இலவச சரக்கு வைக்கும் இடமாக மாற்றுவது பற்றி குழந்தைகளிடம் கேட்டேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதனால், மக்களுக்கு அத்தியாவசியமான எல்லாவற்றையும் கண்டுபிடித்து சேகரித்தோம்.

கழிப்பறை காகிதம், காகித துண்டுகள், சில நூடுல்ஸ் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்துள்ளோம். நாங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி மக்களுக்கு இலவசமாக கொடுப்பதால், பலரும் எங்களுடன் இணைந்து மக்களுக்கு உதவுகின்றனர். ‘லிட்டில் ஃப்ரீ பேன்ட்ரீஸ்’-ல் மக்கள் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு செல்கின்றனர். சிலர், தங்களிடம் உள்ளதை போட்டுவிட்டு செல்கின்றனர். இப்போது, ​​கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதால், ‘லிட்டில் ஃப்ரீ பேன்ட்ரீஸ்’-யை கவனமாக கையாள வேண்டியுள்ளது.

மக்களுக்குள் தொடுவதைக் குறைக்க, ‘லிட்டில் ஃப்ரீ பேன்ட்ரீஸ்’ கதவை அகற்றிவிட்டு, வானிலை தாங்கக்கூடிய கேன்கள் மற்றும் பொருட்களுடன் அதை சேமிக்கத் தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : children ,American ,Corona ,American Children , Corona, Little Free Pantries, Father, American Children
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்