உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள்.. கொரேனாவை விரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது : ஐ.நா.

நியூயார்க் : உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். போர்களை நிறுத்திவிட்டு கொரேனாவை விரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குத்தெரஸ் தெரிவித்துள்ளார்.

பலி எண்ணிக்கை 17,000ஐ தாண்டியது

சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இக்கொடிய உயிர்கொல்லி வைரஸ் 17,000 உயிர்களை காவு வாங்கி உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தையும் கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன.

ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்

இந்த சூழலில் கொரோனா வைரஸ் உலகையே கதிகலங்கச் செய்து வரும் நிலையிலும், சிரியா, ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளில் உள்நாட்டுச் சண்டை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் என இடைவிடாமல் போர்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.இந்த நிலையில், இது குறித்து அன்டோனியோ குட்ரெஸ் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களையும், சண்டைகளையும் உடனடியாக நிறுத்தும்படி நான் அழைப்பு விடுக்கிறேன்.விரோதங்கள், அவநம்பிக்கை, பகைமை ஆகியவற்றில் இருந்து பின்வாங்கி ஆயுதச் சண்டைகளை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். நாம் அனைவருமே ஒன்றாக இணைந்து நமது உயிரைக் காக்க உண்மையான போர் செய்யும் (கொரோனா வைரஸ் ) நேரம் வந்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>