×

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.8 உயர்த்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மேலும் லிட்டருக்கு தலா ₹8 உயர்த்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி சட்ட திருத்த மசோதா, நேற்று மக்களவையில் நிறைவேறியது.  அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைக்கின்றன. கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச சந்தைகள் ஆட்டம் கண்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையும் சரிவை சந்தித்து வருகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 30 டாலருக்கு கீழ் இறங்கியுள்ளது. இதற்கேற்ப விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
  ஆனால், கடந்த 14ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது.  இதில் கலால் வரி 2 ரூபாய் மற்றும் சாலை வரி 1 ரூபாய் அடங்கும். இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 39,000 கோடி வருவாய் கிடைக்கும்.

 இந்நிலையில், 8வது நிதி சட்ட திருத்த மசோதாவை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உச்சவரம்பு தலா 8 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா விவாதம் இன்றி நேற்று நிறைவேறியது. தற்போதைய நிதி சட்டப்படி, கலால் வரியை அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ₹10 வரையிலும், டீசலுக்கு ₹4 வரையிலும்தான் உயர்த்த முடியும். புதிய திருத்த மசோதாவின்படி பெட்ரோலுக்கு லிட்டருக்கு ₹18 வரையிலும், டீசலுக்கு ₹12 வரையிலும் உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது.

Tags : Rs , Legislative amendment, bill , increase , excise duty on petrol ,diesel by Rs
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...