×

போலியோவை ஒழித்த இந்தியா; கொரோனாவை கையாளும் யுக்தியும் உலகிற்கு கற்பிக்க வேண்டும்: WHO நிர்வாக இயக்குனர் ஜே.ரியான் பேட்டி

ஜெனிவா: போலியோவை இந்தியா ஒழித்தது போல, கொரோனாவை கையாளும் விதத்தையும் உலகிற்கு காண்பிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 185  நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 3,78,829-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 16,503 பேர் உயிரிழந்துளளனர்.  இந்தியாவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த வைரசுக்கு 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு  நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரியான், கொரோனா போன்ற தொற்று வைரஸை எதிர்கொள்ள இந்தியா மிகப்பெரிய ஆற்றலை கொண்டுள்ளதாக உலக சுகாதார  தெரிவித்தார். சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த  உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள நாடுகளில்  இந்த வைரஸ் எதிர்வரும் நாட்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவும் மக்கள் தொகை அதிகம் கொண்டதாக இருக்கிறது.

ஆனால், உலகளாவிய தொற்றுகளான சின்னம்மை மற்றும் போலியோவை இந்தியா ஒழித்தது போல, கொரோனாவை எதிர்கொள்வது பற்றியும் உலகிற்கு வழிநடத்த வேண்டும். தொற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா மிகப்பெரிய  ஆற்றலை கொண்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் முன்பு எதிர்கொண்டதை போல உலகிற்கே வழிகாட்டியாக இருப்பது முக்கியமானது என்றும் தெரிவித்தார்.


Tags : J. Ryan ,India ,world ,Corona ,WHO ,Corona Should Teach the World of Tactics , India eradicates polio; Tactics of manipulating Corona should teach the world: Interview with WHO Executive Director J. Ryan
× RELATED இணையவழிக் குற்றங்கள் அதிகம்...