×

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து 3000 திஹார் சிறைக் கைதிகளை விடுவிக்க முடிவு; கோவை, சேலம், பாளையங்கோட்டை சிறை கைதிகளும் ஜாமீனில் விடுவிப்பு

டெல்லி : கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து 3000 சிறைக்கைதிகளை விடுவிக்க திஹார் சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

சிறை கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் அல்லது ஜாமீன் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர்.இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், சிறைக்கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் பரோல், இடைக்கால ஜாமீன் வழங்கி கைதிகளை விடுவிக்கவும் அனுமதி வழங்கி இருந்தது.

*உச்சநீதிமன்றத்தின் அறிவுறுதலையடுத்து  அடுத்த 3-4 நாட்களில் சுமார் 3000 கைதிகளை விடுவிப்பது என்று திஹார் சிறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இவர்களில் 1500 குற்றவாளிகள் பரோலில் விடுவிக்கப்படுவார்கள் மற்றும் பிற 1500 கைதிகள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் திஹார் தெரிவித்துள்ளது.

*உச்சநீதிமன்றத்தின் அறிவுறுதலையடுத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மத்திய சிறையிலிருந்து 5 பெண் கைதிகள் உட்பட 136 கைதிகள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

*இதே போல் சேலம் மத்திய சிறையில் இருந்து 44 கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, ஏப்ரல் 8 வரை அவர்களை வீடுகளில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மத்திய சிறையிலிருந்து 64 விசாரணை கைதிகளும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

*திருவாரூர் பெண்கள் கிளை சிறையில் இருந்து 11 பெண் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் நன்னிலம் கிளை சிறையிலிருந்து 11 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.


Tags : Prison inmates ,Palayamkotta ,coronavirus attack ,Tihar ,Coimbatore ,Salem , Supreme Court, Prisoners, Prisoners Release, Corona Impact, Tihar Jail
× RELATED சுதந்திர தின பொன்விழா ஆண்டையொட்டி 4வது...