×

பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கும் நேரம் மாற்றம்: தேர்வுகள் துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: இன்று நடக்க உள்ள (24ம் தேதி) பிளஸ் 2 தேர்வு (வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்), 26ம் தேதி நடக்க உள்ள பிளஸ் 1 வகுப்பு தேர்வுகள் (வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்) காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடியவேண்டியதற்கு பதிலாக, காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.45 மணிக்கு முடிவடையும் வகையில் நடத்த வேண்டும்.

கூடுதல் நேர சலுகை பெற்று தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மதியம் 2.45 மணி வரை அனுமதி வழங்க வேண்டும். மேலும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வருவதற்காக அவர்களின் பெற்றோர் யாராவது உரிய நேரத்துக்கு தேர்வு மையத்துக்கு தங்கள் பிள்ளைகள் வருவதற்கு போக்கு வரத்து வசதி செய்து தருமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்தால், உடனடியாக அந்த வகை மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்கு செல்வதற்கு  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : exams department , Plus 2 exams,start time, notification ,exams department
× RELATED அரசுத் தேர்வுகள் இயக்கக...