×

மலேசியாவில் சிக்கி தவித்த 114 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை : பரிசோதனையில் 9 தமிழர்களுக்கு கொரானா அறிகுறி

சென்னை : மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் ஏர்ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு சுகாதார துறை சார்பில் பரிசோதனை நடந்தது.அந்த பரிசோதனையில் 9 தமிழர்களுக்கு கொரானா அறிகுறி இருந்ததால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். எஞ்சிய 104 பேரும்  பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

கொரோனா பாதிப்புக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் மலேசியாவும் ஒன்று. எனவே மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை என்பது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றவர்கள் இந்தியா செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்ததால், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தான் தமிழக அரசின் முயற்சியால் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் ஏர்ஏசியா விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.


Tags : Tamils ,Malaysia ,Chennai , Malaysia, Tamils, aircraft, AirAsia, Corona
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...